தீபத்தின் ஒளிதனிலே
தீமைகள் அனைத்தும் பறந்தோடிட
சுடர் ஒளியின் வாசமதிலே
கவலைகள் அனைத்தும் கரைந்தொழுகிட
பூத்திருக்கும் இந்நாளாம் நன்னாளில்
மனம் மலர்ந்து வாழ்த்துகிறேன்...
அகல் விளக்கை புள்ளியாக இட்டு
தீபங்களின் ஒளியை கோலமாக வரைந்து
வாயில் தோறும் தீபங்கள் ஏற்றிடுவோமாக!
இறை அருள் பெற்றிடுவோமாக!
இந்த இனிய கார்த்திகை தீபத் திரு நாளில் நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறிடவும், உங்கள் வாழ்வில் நிறைவான கல்வியும், குன்றா வளமும், குறைவில்லா செல்வமும், நோய் நொடியற்ற உடலும் பெற்று நலமுடன் வாழ்ந்திடவும் நான் வேண்டிக்கொள்கிறேன்.